நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்பு 108-ஐ தாண்டிய நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை. திருமண நிகழ்ச்சிகளில் உள் அரங்குகளில் 100 பேருக்கும், வெளி அரங்குகளில் 100 பேருக்கு மட்டும் அனுமதி. திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.