தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் தொடங்கப்பட்டது.
இதற்கிடையில் வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் எதிரொலியாக பள்ளி கல்லூரிகளில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சுழற்சிமுறை வகுப்புகள் தொடர்ந்து நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.