தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் தீவிரமாக பரவி வரும் சூழலில், புத்தாண்டையொட்டி அதிகமாக பரவிவிட கூடாது என்பதற்காக பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழக முழுவதும் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனியத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் டிசம்பர் 31 இரவு நடத்தப்படும் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. – ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.