Categories
மாநில செய்திகள்

Omicran: தமிழக எல்லைகளில் தீவிர சோதனை…. அதிரடி…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில் பக்கத்து மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சலை தொடர்ந்து ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு வேறு ஏதேனும் அறிகுறி உள்ளதா? என்று பரிசோதனை செய்கின்றனர். நோய் பாதிப்பு எதுவும் இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து வாகனத்தில் வருபவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்கின்றனர். ஒரு டோஸ் மட்டும் செலுத்தி இருந்தால் 72 மணி நேரத்துக்கு முன்பாக பெறப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் கேரளாக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |