நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. மேலும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் – மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஒமிக்ரான் தொற்று பரவலை பொறுத்து தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட, மாநில அளவில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.