தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் அதிகரிக்கும் நோய் தொற்றை கட்டுப்படுத்திட உரிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.