தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியது. இதனால் இந்தியாவில் அடுத்த மாதம் அல்லது பிப்ரவரியில் ஒமைக்ரான் அலை வீசும். ஒமைக்ரான் வைரஸின் மாறுபாடு டெல்டா திரிபு பரவும் வேகத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒமைக்ரான் தொற்று பரவும் தன்மை அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை ஏற்கனவே பல மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவ தொடங்கியுள்ளது . தற்போது வரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதார துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.