தற்போது மெட்ரோ நகரங்களில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் வைரஸ் வரும் காலத்தில் சிறு மற்றும் குறு நகரங்கள் அதைத்தொடர்ந்து கிராமங்களில் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கேரளாவின் கொச்சி இந்திய மருத்துவக் கழகத்தின் கோவிட் தடுப்பு குழு தலைவர் டாக்டர் ராஜு ஜெயதேவன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தற்போது பெரிய நகரங்களில் பரவிவரும் இந்த தொற்று சில வாரங்களில் கிராமங்களில் பரவும். மேலும், டெல்டா, ஒமைக்ரான் என எந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸும் வீரியம் பெறும் அளவுக்கு உயிர் வாழ்ந்தது இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோல்தான் ஒமைக்ரான் வகை தொற்றும் நீண்டநாள் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.