Categories
தேசிய செய்திகள்

Omicron: இரவு நேர ஊரடங்கு அமல்…. அரசு  அதிரடி உத்தரவு….!!!

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அரியானா மாநிலத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்த தொற்று காரணமாக இந்தியாவில் 415 பேர் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் ஒமைக்ரான் பரவலை கட்டுபடுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

இதையடுத்து மத்திய பிரதேசம், குஜராத், அசாம், உத்திரபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது இந்த மாநிலங்களை தொடர்ந்து அரியானா மாநிலத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் அதிகரிக்கும் பட்சத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |