ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது.
இதனால் பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் ஓரளவு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு, பொது மக்கள் கூட்டமாக கூட தடை, திருமணம், இறுதி சடங்குகளில் குறைந்த நபர்களை அனுமதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.