மும்பை மாநிலத்தில் ஜனவரி 7ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மாநில முதல்வர் தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மும்பையில் ஓமைக்ரான் தீவிரமாக பரவி வருவதால் இன்று முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 3900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.