இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 97 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளங்களுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு ஊரடங்கி நீடிப்பது குறித்து முதல்வர் மருத்துவம் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியான் தெரிவித்துள்ளார்.