Categories
உலக செய்திகள்

OMICRON: புதிய அறிகுறிகள்…. ஆய்வில் வெளிவந்த உண்மைகள்….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒமைக்ரான் தொற்று டெல்டா வகை கொரோனா வைரஸ்-ஐ விட வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸ் 1 மாதத்திற்குள் 100 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது இந்தியாவில் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ தொட்டுள்ளது. இந்தநிலையில் ஒமைக்ரான் தொற்று குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், அதன் அறிகுறிகள் குறித்து ஆராய்ந்ததில் ஒமைக்ரானுக்கு பல அறிகுறிகள் இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான அறிகுறி இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

அதுதான் தொண்டை வலி. ஒமைக்ரானால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் தொண்டை வலி மட்டுமே அறிகுறியாக இருந்திருக்கிறது. மேலும் தென்னாப்பிரிக்காவில் தொண்டை வலியுடன் சேர்ந்து மூக்கடைப்பும் பலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பிரிட்டனிலும் ஒமைக்ரான் பாதித்தவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தலைவலி, சோர்வு முக்கியமாக குளிர் போன்ற அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் ZOE Symptom Tracking எனப்படும் ஒமைக்ரான் அறிகுறி குறித்த ஆய்வு அறிக்கையில் மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு, தும்மல் மற்றும் தொண்டை புண் அல்லது வலி ஆகியவை தான் அறிகுறிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், டெல்டா-ஒமைக்ரான் அறிகுறிகள் பொதுவானதா என்றால் இல்லை. டெல்டாவுக்கு ஒமைக்ரானுக்கும் உள்ள அறிகுறிகள் மாறுதல்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். டெல்டா பாதிப்பில் வாசனை, சுவை தெரியாமல் போவது, காய்ச்சல், தொடர்ச்சியான இருமல், சோர்வு போன்றவை அறிகுறிகளாக இருந்தது சிலருக்கு குடல் பிரச்சனைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் அறிகுறிகள் ஆய்வினை தலைமையேற்று நடத்தியிருக்கும் விஞ்ஞானியான பேராசிரியர் டிம் ஸ்பெண்டர் பேசுகையில், ஒமைக்ரான் அறிகுறிகள் மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தும்மல், குளிர் தொடர்புடையவையாக இருக்கிறது. எனவே மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அது கோவிட்டாகவும் கூட இருக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |