அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக கண்காணிக்கும் படி மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 415 பேர் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவர் மூலம் ஒமைக்ரான் தொற்று பரவியது. தற்போது தமிழகத்தில் 4 மாவட்டங்களில் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் கூட்டம் சேர்வதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக உத்தரபிரதேசம், அரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.