மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் மும்பையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியது. இதனால் இந்தியாவில் அடுத்த மாதம் அல்லது பிப்ரவரியில் ஒமைக்ரான் அலை வீசும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை ஏற்கனவே பல மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று பரவ தொடங்கியுள்ளது . தற்போது வரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது வரை 28 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பொது இடங்களில் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகங்களில் பணிபுரிபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி போடாத வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.