ஒமிக்ரோன் தொற்று காரணமாக குழந்தைகளுக்கு மாரடைப்பு உண்டாகும் வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் சுமார் 18,849 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொண்டது. இதில், ஒமிக்ரானால் பாதிப்படைந்த பின் மூக்கு, தொண்டை, குரல்வளை அடங்கிய மேல் சுவாசக்குழாயில் தொற்றின் தீவிரம் அதிகமாக இருப்பது தெரியவந்திருக்கிறது.
எனவே, இயல்பாக உண்டாகும் வறட்டு இருமல், நெஞ்சு வலி, மூக்கடைப்பு போன்றவற்றைக் காட்டிலும் கொரோனாவிற்குப்பின் உண்டாகும் பாதிப்புகள் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுத்துவதோடு, சுருங்கிய சுவாசக்குழாய் காரணமாக மாரடைப்பை உண்டாக்கும் ஆபத்து இருக்கிறது என்று ஆய்வின் முடிவில் தெரியவந்திருக்கிறது.