Categories
உலக செய்திகள்

“Omicron வைரஸின் முதல் முப்பரிமாண புகைப்படம்!”… இத்தாலி ஆய்வாளர்கள் குழு வெளியீடு…!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் என்ற புதிய வகை வைரஸின் முப்பரிமாண படம் முதன் முதலாக வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல், தற்போதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்  மாறுபாடுகளில், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகைதான் அதிக வீரியம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் கடந்த வாரம் ஓமிக்ரோன் என்ற புதிய வகை மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மாறுபாடு, டெல்டாவை காட்டிலும் வீரியம் உடையது என்று மருத்துவ நிபுணர்கள் கூறியிருந்தனர். முதலில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய Omicron வைரஸ் தற்போது, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இத்தாலி நாட்டின் ரோம் நகரில் இருக்கும் பாம்பினோ கெசு என்ற மருத்துவமனையின் ஆய்வாளர்கள் குழு, Omicron வைரஸின் முதல் முப்பரிமாண புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது. மேலும், இது டெல்டா மாறுபாட்டை விட இரண்டு மடங்கு அதிக வீரியம்  கொண்டிருக்கிறது என்று ஆய்வாளர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |