Categories
உலக செய்திகள்

“பிரேசில் நாட்டிலும் பரவியது ஒமிக்ரான்!”… சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!

பிரேசில் நாட்டில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 2 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் பரவிய ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளிலும் பரவத் தொடங்கியிருக்கிறது.

எனவே, உலக நாடுகள் இந்த வைரஸை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அமெரிக்க அரசு கடந்த திங்கட்கிழமை அன்று தென்னாப்பிரிக்கா உட்பட எட்டு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத்தடை அறிவித்தது. இந்நிலையில், பிரேசில் நாட்டிற்கு, தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பயணிகள் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது  கண்டறியப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |