மெக்சிகோ நாட்டில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த நபருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பரவிவரும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓமிக்ரான் தொற்று, மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் முதல் ஒமிக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து 51 வயதுடைய நபர் மெக்சிகோவிற்கு வந்திருக்கிறார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று அந்நாட்டின் சுகாதாரத்துறைச் செயலாளரான ஹ்யூகோ லோபஸ்-கேடெல் ராமிரெஸ் தெரிவித்திருக்கிறார்.