Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் இத்தனை மாகாணங்களில் பரவி விட்டதா!”…? அதிகரித்த ஒமிக்ரான்…!!

அமெரிக்க நாட்டில் குறைந்தது 11 மாகாணங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய மாறுபாடு முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பரவத் தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே, இந்த ஒமிக்ரான் தொற்று அமெரிக்காவில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், அந்நாட்டில் குறைந்தது 11 மாகாணங்களில், ஒமிக்ரான் பரவியிருப்பதாக  கூறப்படுகிறது. அந்த வகையில், மேரிலேண்ட், மிசவுரி, உடா, நியூ ஜெர்சி, நெப்ராஸ்கா மற்றும் பென்சில்வேனியா போன்ற மாகாணங்களில், ஒமிக்ரான் தொற்று நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, கொலொராடோ, நியூயார்க், கலிஃபோர்னியா, மின்னசோடா மற்றும் ஹவாய் போன்ற மாகாணங்களிலும் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |