Categories
உலக செய்திகள்

மூன்றாவது தவணை தேவையா….? ஒமைக்ரான் தடுப்பூசி குறித்து…. எடுத்துரைக்கும் முதன்மை அறிவியல் அலுவலர்….!!

ஒமைக்ரான் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு மூன்றாவது தவணை தடுப்பூசி தேவைப்படும் என்று கூறப்படுகிறது.

ஒமைக்ரான் தொற்றானது கடந்த நவம்பர் மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒமைக்ரான் தொற்றானது உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவி வருகிறது. இது குறித்து உலகின் உள்ள பல்வேறு விஞ்ஞானிகளும் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒமைக்ரானுக்கு எதிராக தங்களின் தடுப்பூசி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை கண்டறிய பைசன் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

அதில் “சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் தடுப்பூசியின் செயல் திறனானது 25 மடங்கு குறைவாக உள்ளது” என்று தெரிவித்துள்ளனர். அதிலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் ஒமைக்ரானுக்கு எதிராக போராட வேண்டுமெனில் மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்ற கட்டாயச் சூழல் உருவாகும் என்று கூறியுள்ளனர்.

இது குறித்து பைசர் நிறுவனத்தின் முதன்மை அறிவியல் அலுவலரான மைக்கேல் டோல்ஸ்டன் கூறியதில் ” ஒமைக்ரானுக்கு எதிராக மூன்று தவணை தடுப்பூசிகள் தேவைப்படும் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதிலும் மூன்றாவது தவணை தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் ஆன்டிபாடிகள் அதிகமாக சுரக்கின்றன.

இது வைரஸுடன் சில மாதங்கள் வரை போராட போதுமானதாக இருக்கும். இந்த இடைவெளியில் தேவைப்பட்டால் புதிய தடுப்பூசியை தயாரித்துக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.  மேலும் ஒமைக்ரான் தற்பொழுது வரை லேசான பாதிப்புகளையே ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே நேரத்தில் வேறு ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தடுப்பூசியின் தடுக்கும் ஆற்றலானது 40% வரை குறையலாம் என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |