உருமாற்றம் அடைந்த புதிய ஒமைக்ரான் தொற்றானது சீனாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து இது பல்வேறு உலக நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதற்கிடையில் இந்த தொற்றானது டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாற்றம் அடைந்து பரவி வந்தது.
இதிலிருந்தே இன்னும் உலக நாடுகள் முழுமையாக மீண்டு வரவில்லை. இந்த நிலையில் அண்மையில் ஒமைக்ரான் என்ற புதிய உருமாற்றம் அடைந்த தொற்றானது தற்போது பரவி வருகிறது. இது கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.
தற்பொழுது சீனாவில் முதன்முதலாக ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவத வடக்கு சீனாவில் உள்ள டியான்ஜின் பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து ஒருவர் வந்துள்ளார். அவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.