Categories
உலக செய்திகள்

சிங்கப்பூரில் ஒமிக்ரான் தீவிரமடையும்…. நிபுணர்கள் எச்சரிக்கை…!!!

சிங்கப்பூரில் ஒமிக்ரான் பரவல் விரைவில் தீவிரமடையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் சுமார் 692 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த வருடம் பரவியது போன்று தற்போது சிங்கப்பூரில் ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருக்கும் என்று தொற்று நோயியல் நிபுணரான அலெக்ஸ் குக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, “சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் பரவும் ஒமிக்ரான் தொற்று, 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை அதிகரிக்கும். எவ்வாறான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை பொறுத்து தான் அடுத்து வரக்கூடிய அலையின் தீவிரமும் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

எனினும், சில நிபுணர்கள் கடும் விதிமுறைகள் சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட இங்கு தொற்று குறைவாகவே பரவும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |