தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸால் தற்போது வரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாற்றமடைந்த கொரோனா வைரஸால் தற்போது வரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸுக்கு எதிராக அனைத்து நாடுகளும் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை சேகரித்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரானின் வேகம் மிக அதிகமாக இருந்தாலும் கூட அதற்கு மூலகாரணமாக டெல்டா வகை வைரஸ் பாதிப்பே உள்ளது.
ஆகையால் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி கொண்டால் ஓமிக்ரான் பாதிப்பிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.