Categories
மாநில செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்” 275 படுக்கைகள் ரெடியா இருக்கு…. அரசு வெளியிட்ட தகவல்….!!

ஒமிக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அரசு மருத்துவமனையில் 275 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது.

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று தென் ஆப்பிரிக்காவில் முதலில் தோன்றி பிற நாடுகளிலும் தற்போது பரவி வருகிறது. இந்த ஒமிக்ரான் வைரஸ் கொரோனா தொற்று தீவிரமாக பரவக் கூடியதாகவும், வீரியமிக்கதாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்தியா மற்றும் தமிழகத்திலும் தொற்று பாதிப்பு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து வருபவரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையில் மற்றொருபுறம் மாநிலத்துக்குள்ளும் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒமிக்ரானை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகும் நபர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 150 படுக்கைகள் ஒதுக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4-வது தளத்தில் முதற்கட்டமாக 150 படுக்கைகள் தயார் செய்து ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 75 படுக்கைகள், ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் 15 ஐ.சி.யு படுக்கைகள் மற்றும் மற்றும் 35 பொது படுக்கைகள் என மொத்தம் 275 படுக்கைகள் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கிண்டி கொரோனா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு படுக்கைகள் காலியாக கிடப்பதால் தேவைப்படும் நேரத்தில் ஒமிக்ரான் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அனுமதித்து சிகிச்சை அளித்தால் மேலும் தொற்று பரவுதல் தடுக்கப்படும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |