ஒமிக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசிகள்தான் முக்கிய ஆயுதமாகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளானது மருத்துவ சுகாதார வசதிகளை மேம்படுத்தி கொள்ளவேண்டும். மேலும் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையில் வெளிநாட்டவர்களுக்கு தடை விதிப்பது மட்டும் எந்த பலனையும் தராது என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருபவர்களை தடைசெய்த ஆஸ்திரேலியாவில் புதிய வகையாக உருமாறிய கொரோனாவின் பாதிப்புகள் அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் ஆசிய மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற நாடுகளிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனிடையில் எல்லைகளை அடைப்பது கால அவகாசத்தைப் பெற உதவலாமே தவிர வைரஸ் பரவுவதைத் தடுக்க இயலாது என்று உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாது. ஆகவே மக்கள் பயமடைய வேண்டாம் என்றும் உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.