நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ஒமைக்ரான் சமூக பரவலாக மாறியதாக INSACOG அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தற்போது ஒமைக்ரான் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. எஸ் ஜீன் டிராப்-ஐ கண்டறிய நடத்தும் சோதனையால் ஒமைக்ரானை திட்டவட்டமாக உறுதிசெய்ய முடியாது. பெரும்பாலும் ஒமைக்ரான் தொற்று பாதித்தவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் லேசான பாதிப்பே இருக்கிறது. ஒமைக்ரான் அபாயம் தொடர்வதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
Categories