தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று முதல் ஜனவரி 2 வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் மருந்தகங்கள் உள்ளிட்ட கடைகள் தவிர மற்ற கடைகளில் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.