Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: ஜெட் வேகத்தில் பரவும்…. அலட்சியம் வேண்டாம்…. எச்சரிக்கை விடுத்த சவுமியா சுவாமிநாதன்….!!!

கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் தற்போது ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க ஆரம்பித்துள்ளது. இதில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் பரவல் தொடர்பாக ஹூ நிபுணர் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ள புதிய கருத்துக்களான, இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் மிக வேகமாக இருக்கும். மேலும் மருத்துவ தேவைகளும் அதிகரிக்கும்.

உலகம் முழுவதும் ஏற்கனவே ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளது. இதனிடையில்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரை விட அவுட் பேஷன்ட் பிரிவுகளில்தான் அதிக அளவில் கூட்டம் அலைமோதும். இதில் ஐசியூக்களை விட வீடுகளிலேயே சிகிச்சை பெற்று கொள்வோர் அதிகரிப்பார்கள். எனினும் மக்களிடையே அலட்சியம் இருப்பது கவலையை ஏற்படுகிறது. பலருக்கு அறிகுறிகளே தெரியாது. ஆனால் எவ்வாறு தங்களுக்கு கொரோனா வந்துள்ளது என்பதை அறிவதற்கு மக்களுக்கு மருத்துவ வழிகாட்டுதல் தேவைப்படும். அதற்காக நாம் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ஆன்லைன் ஆலோசனைகளுக்கான வசதிகளை உடனே ஏற்படுத்த வேண்டும். யாரும் மருத்துவமனைக்கு வந்து ஆலோசனை கேட்டுக் திரண்டு வராமல் இருக்க தொலைத்தொடர்பு கால் சென்டர்களை ஏற்படுத்த வேண்டும். எனவே மருத்துவத்தை விடவும் மருத்துவ ஆலோசனை குறித்த சேவைகளுக்குத்தான் அதிகமான தேவை ஏற்படும். மேலும் ஓபி வார்டுகளில் போதிய அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அதுமட்டுமின்றி முடிந்தவரை வீடுகளிலேயே சிகிச்சை தர வேண்டியிருக்கும். அதற்க்கான வசதிகளையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய கேஸ்கள் குறைவாகவே இருக்கும். ஆகவே ஐசியூ உள்ளிட்ட நெருக்கடிகள் பெரிதாக இருக்காது. எனினும் மக்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டியது அவசியமாகும். சாதாரண காய்ச்சல், சளிதானே என்று விட்டு விடக் கூடாது. அதுதான் கவலைக்குரியதாக இருக்கிறது. மக்கள் விழிப்புணர்வு மிக மிக அவசியம் ஆகும். ஒமிக்ரான் பாதிப்பு குறைவு என்றாலும் அது பரவல் வேகம் டெல்டா வகையை விட 4 மடங்கு அதிகமாகும். ஆகவே மக்கள் மிக மிக கவனமாக இருந்தால்தான் மருத்துவமனைகளில் கூட்டத்தை சமாளிக்க முடியும்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |