Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: யாரும் பீதியடைய வேண்டாம்…. மூச்சுத் திணறலுக்கு வாய்ப்பு குறைவு…. எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா….!!!

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவினாலும் கடந்த காலத்தை போன்று மோசமான ஒரு பாதிப்பு தற்போது வராது என்பதால் மக்கள் அச்சமடைய  தேவையில்லை என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒமிக்ரான் வைரஸ் சுவாசப்பாதை மற்றும் நுரையீரலின் மேற்பரப்பையே அதிகம் பாதிப்படைய செய்வதாக கூறியுள்ளார். ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவவர் பக்க நோய்கள் ஏதும் இல்லாத நிலையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் சாதாரண சிகிச்சையிலேயே குணமடைய முடியும்.

அவருக்கு ஆக்சிஜன் குறைந்து மூச்சுத் திணறல் ஆகிய பாதிப்புகளை ஒமிக்ரான் ஏற்படுத்தாது. கொரோனா தொற்று பரவலில் இருந்து நாம் முழுமையாக விடுபடவில்லை என்பதை மக்கள் கவனத்தில் கொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதோடு விழிப்புடன் இருக்க வேண்டும். இதனிடையில் ஒமிக்ரான் வைரசால் மோசமான பாதிப்புகள் ஏற்படாது என்றாலும் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கையுடனும் தயார் நிலையிலும் இருப்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை” என்று அவர் கூறியுள்ளார். எய்ம்ஸ் இயக்குநரான ரந்தீப் குலேரியா சிறந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |