போலந்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவருக்கு தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான்உலகம் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் போலந்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து போலந்தில் வசித்துவரும் பெண்மணிக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை போலந்து நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.