Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. இனி சாலையில் 10 பேருக்கு மேல்…. புதிய கட்டுப்பாடுகள் அமல்….!!!!

உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை போர்ச்சுக்கல் நாட்டு அரசாங்கம் எடுத்துள்ளது. இதுகுறித்த முடிவு நேற்று டிசம்பர் 22 நடைபெற்ற அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் அன்டோனியா கோஸ்டா தெரிவித்து உள்ளார். அதன்படி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பெரும்பாலான மக்கள் ஒரு குழுவாக இணைவதை தடுக்க முயற்சி செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் குடும்பங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அரசு விதித்துள்ள சில கட்டுப்பாடுகளான, புத்தாண்டு தினம் அன்று பொது சாலைகளில் 10 பேருக்கு மேல் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இலவச கொரோனா ஸ்கிரீனிங் சோதனைகளின் எண்ணிக்கை ஒரு நபருக்கு ஒவ்வொரு மாதமும் 4 முதல் 6 முறையாக அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 1,040 மருந்தகங்கள் தொழில்முறை பயன்பாட்டிற்கான இலவச சோதனைகளை மேற்கொள்ள பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 454 ஆய்வகங்கள் இந்த திட்டத்தை கடைப்பிடிக்கின்றது. இதனையடுத்து ஜனவரி முதல் வாரத்தில் அரசாங்கம் வரையறுத்திருந்த நடன இடங்களை கொண்ட டிஸ்கோக்கள் மற்றும் பார்கள் அனைத்தும் டிசம்பர் 25 முதல் அடைக்கப்படும். அதன்பின் டிசம்பர் 25 முதல் அலுவலகப் பணியாளர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனைதொடர்ந்து விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கான அணுகல் டிசம்பர் 25 முதல் கொரோனா வைரசுக்கான எதிர்மறை சோதனையின் விளக்கத்தை பொறுத்து முடிவு செய்யப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். தற்போது பொது இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க வணிக இடங்களின் திறனைப் பொறுத்து ஒவ்வொரு 5 சதுர மீட்டருக்கும் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது உணவகங்கள், சூதாட்ட விடுதிகளில் பங்கேற்க எதிர்மறை சோதனை தேவைப்படும். அதேபோன்று ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள், திருமணங்கள் போன்றவற்றிற்கும் தற்போது எதிர்மறை பரிசோதனை அவசியமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொது சாலைகளில் 10 பேருக்கு மேல் கூடுவதும் தடை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |