அமெரிக்காவில் சுகாதார ஊழியர்களுக்கான தனிமைப்படுத்துதல் காலம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மடுத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனிடையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களை கவனிப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் சுகாதார பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்காக கொரோனா பாதித்த சுகாதார ஊழியர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை அரசு குறைத்துள்ளது.
இதுவரையிலும் கொரோனா தொற்றுக்கு ஆளான சுகாதார உழியர்கள் 10 நாட்கள் தங்களை கட்டாயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. தற்போது அவை 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கொரோனா பாதித்த சுகாதார ஊழியர்கள் தொற்று உறுதி செய்யப்பட்ட 20 நாட்களுக்கு பிறகே தங்களின் பணிக்கு திரும்ப செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.