Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”… தனியார் ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முடிவு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து நாடுகளும் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஒமிக்ரான் புதிய வகை கொரோனா அபாயத்தை அடுத்து அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ திங்கட்கிழமை வெளியிட்டார். இதனிடையில் அடுத்த ஒருசில வாரங்களில் அவருடைய மேயர் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயார்க்கில் வரும் 27-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வர உள்ளது. அதன்படி பன்னாட்டு வங்கிகள் முதல் சாதாரண மளிகைகடை வரை பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் தொடர்ச்சியான கொரோனா பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

Categories

Tech |