Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”…. இது லேசானதுன்னு நினைக்காதீங்க…. எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு…!!!!

ஒமிக்ரான் வைரஸ் லேசானது என நிராகரித்து விட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
உலகம் முழுவதிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை டெல்டா வைரசுடன் ஒப்பிடும்போது அதை விட பல மடங்கு வேகமாக பரவுவதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றன. எனினும் நாளொன்றுக்கு ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இது தொடரப்பட உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறியபோது “நாம் அறிந்தவரையில் டெல்டா வைரசை விட ஒமிக்ரான் வேகமாக பரவுவதாக தெரிகிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்துள்ள தரவுகளான ஒமிக்ரான் வைரசால் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. அதே சமயம் ஒமிக்ரான் தொற்றின் மருத்துவ தீவிரத்தன்மை கட்டுக்குள்தான் உள்ளது.
ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ நிலையை புரிந்துகொள்ள கூடுதல் தகவல்கள் தேவைப்படுகின்றது. ஆகவே வரும் வாரங்களில் கூடுதல் தகவல்களை எதிர்பார்க்கிறோம். ஒமிக்ரான் லேசானது என்று நிராகரித்து விட முடியாது. குறைந்தபட்ச பாதுகாப்பு மற்றும் அதிக ஆபத்தில் இருப்பவர்களை பாதுகாப்பதில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். நாடுகள் ஒமிக்ரான் தொற்றை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால் ஏற்கனவே கொரோனாவை தடுப்பதில் நிரூபணமாகி உள்ள ஆரோக்கிய, சுகாதார வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதைக் கொண்டுதான் நாம் ஒமிக்ரான் பரவலை தடுக்க முடியும்.
மேலும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், ஆக்சிஜன் கையிருப்பு, போதுமான சுகாதார பணியாளர்கள் இருப்பு, பரவும் திறன் உட்பட சுகாதார பாதுகாப்பு திறன் போன்றவற்றை அனைத்து மட்டங்களிலும் ஆய்வு மேற்கொண்டு பலப்படுத்த வேண்டும். உங்களை நீங்கள் பாதுகாப்பதோடு மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும். அதுமட்டுமின்றி  நீங்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும். முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடியுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், இருமல் மற்றும் தும்மலை பாதுகாப்பாக செய்தல் போன்றவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
ஒமிக்ரான் வைரசை பொறுத்தவரையிலும் தடுப்பூசிகள் நோய்த்தொற்றுக்கு எதிரான செயல்திறனை குறைத்து விடலாம் என்று ஆரம்ப கட்ட தரவுகள் தெரிவிக்கின்றனர். எனினும் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஒமிக்ரான் எந்த அளவுக்கு தடுப்பூசிக்கு தப்புகின்றன, நோய்த்தொற்றில் இருந்து பெறப்பட்ட எதிர்ப்பு சக்தியை தவிர்க்கின்றன என்பதை அதன் பின்னர் புரிந்து கொள்ள முடியும். தற்போதைய தடுப்பூசிகள் ஒமிக்ரானுடன் தொடர்புடைய நோய்த்தீவிரம் மற்றும் இறப்புக்கு எதிராக எந்த அளவுக்கு பாதுகாக்கின்றன என்பதெல்லாம் ஆய்வுக்குப் பின்புதான் தெரியவரும். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான முக்கிய கருவி தடுப்பூசி ஆகும். ஆகவே நாம் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் பொது சுகாதார, சமூக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |