ஒமிக்ரான் வைரசை கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கட்டுப்படுத்துமா என்பது தொடர்பான ஆய்வு முடிவுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரசை ஸ்புட்னிக்–வி தடுப்பூசி கட்டுப்படுத்துமா என்பது குறித்து ஆய்வு முடிவுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த தகவலை மாஸ்கோவில் உள்ள அந்நாட்டின் தேசிய நோய் பரவல் தடுப்பு மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஒரே நாளில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 16 ஆயிரத்து 896 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையிலும் அந்நாட்டில் 67 லட்சம் பேர் முழுமையாக தடுப்பு செலுத்தி உள்ள நிலையில், 74 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்.