Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்”…. வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும்…. பிரபல நாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்….!!!!

தாய்லாந்து வருகிற வெளிநாட்டு பயணிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.
 தாய்லாந்தில் கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஒன்றரை வருடங்களுக்கு பின் கடந்த நவம்பர் மாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகள் தாய்லாந்து வர அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது “பரிசோதனை செய்து செல்” என்ற திட்டத்தின்படி தாய்லாந்துக்கு வருகின்ற வெளிநாட்டு பயணிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் தாய்லாந்திலும் கால் பதித்து விட்டது. மேலும் இந்த வைரஸ் அங்கு வேகமாக பரவலாம் என்ற கவலை எழுந்துள்ளது. இதனால் ‘பரிசோதனை செய்து செல்’ திட்டத்தை ரத்துசெய்து தாய்லாந்து வருகிற வெளிநாட்டு பயணிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

Categories

Tech |