மினிவேன் மற்றும் ஆம்னி பேருந்து கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் நான்கு வழி சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்த மினிவேன் ஒன்று திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்நிலையில் மினிவேனுக்கு பின்னால் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தும் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்து டிரைவர் கணேசன் மற்றும் பயணிகள் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மேலூர் தீயணைப்பு படையினர், மேலூர் சுங்கசாவடி விபத்து மீட்பு குழுவினர் மற்றும் மேலூர் துணை சூப்பிரண்டு அதிகாரி ஆர்லியஸ்ரேபோனி, இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.