Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஓவியர்கள் சங்கம் சார்பில்… கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம்… பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தின் சார்பில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.  இதனையடுத்து தடுப்பூசி போடும் பணிகளையும் துரிதப்படுத்தி உள்ளனர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் மற்றும் மணிக்கூண்டு பகுதிகளில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதில் 10 ஓவியர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும்  பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் வரையப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |