Categories
பல்சுவை

தீபாவளி அன்று….. ”இதை செய்தால்”…. வருடம் முழுவதும் பண மழை தான்…!!

தீபாவளியன்று இது நாம் செய்யக்கூடிய எந்த செயலாக இருந்தாலும் அது நமக்கு நன்மையைத் தரக் கூடியதாக  இருக்க வேண்டும்.

தீபாவளி திருநாள் மிகவும் முக்கியமான ஒரு நாள் இருளை அகற்றி ஒளியை நம் வாழ்க்கையில் பெருக்கக் கூடிய மிக மிக அற்புதமான திருநாள். இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய பூஜை முறைகள் மிகவும் முக்கியமானது. அதிகாலை எழுந்து கங்கா ஸ்னானம் செய்து அதுக்கு அப்புறமா நாம பூஜை அறையில் பூஜை செய்வது மிக மிக முக்கியமான செயலாக பார்க்க படுகிறது. இந்த நாளில் குடும்பத்துல இருக்கிற அனைவரும் ஒன்றாக சேர்ந்து நாம் வழிபாட்டை செய்யும்போது லட்சுமி தேவியானவள் நம் வீட்டிற்கு வருவாள் அதேபோல் லட்சுமியை அன்று நாம் மனதார பிரார்த்தனை செய்யும்போது செல்வ வளங்கள் அனைத்தையும் வாரி வழங்கி விடுவார் லட்சுமி தாயார்.

என்ன செய்ய வேண்டும் : 

அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்து பூஜை அறையில் இருக்கக்கூடிய எல்லா சுவாமி படங்களுக்கும் மலர்களை வைத்து குத்துவிளக்கு ஏற்றுவது என்பது மிகவும் முக்கியமானது. தீபாவளி அன்று ஐந்துமுக குத்து விளக்கை ஏற்ற வேண்டும் அன்பு ,  மன உறுதி , நிதானம் சமயோசித புத்தி , சகிப்புத் தன்மை ஆகிய ஐந்து குணங்களும் மனிதருக்கு மிகவும் அவசியமானது. அவை குத்துவிளக்கின் ஐந்து முகங்களில் பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் தத்துவம்.

Image result for ஐந்து முக குத்துவிளக்கு

இதன் அடிப்படையில் தான் திருமணமான பெண்கள் கணவன் வீட்டிற்கு வரும்போது  குத்துவிளக்கு ஏற்ற சொல்றாங்க. அதேபோல எந்த ஒரு சுப காரியங்கள் ஆக இருந்தாலும் குத்துவிளக்கு ஏற்றி தான் வழிபட்டு தொடங்குவார்கள். அதனால் இந்த நாள்ல குத்துவிளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பானது.

எப்படி செய்ய வேண்டும் : 

என்னதான் நாம பூஜையறையில் குத்து விளக்கு ஏற்றினாலும் 9 அகல் விளக்குகளை வைத்து அதில் நெய் ஊற்றி மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றும் போது அந்த சுடரானது மஹாலக்ஷ்மி படத்தில் படும்போது அது பிரகாசமாக இருக்கும் , நம்முடைய வாழ்க்கையும் பிரகாசமாகவே இருக்கும் என்பது தான் ஐதீகம்.

Image result for அனுமன் வழிபாடு

அதே போல இந்த நாளில் அனுமன் வழிபாடு என்பது ஒரு சிறப்பான பலன்களை நமக்கு பெற்று தரும். நெய் தீபம் ஏற்றுவது அனுமனுக்கு மிகவும் சிறப்பு. அதில் இரண்டு  கிராம்பை போட்டு ஏத்துனா அது உங்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.

எங்கு வச்சு செய்ய வேண்டும் : 

நெய் தீபம் நீங்க வீட்டில் ஏற்றினாலும் சரி அல்லது அனுமன் கோவிலுக்கு சென்று அங்கு நீங்க நெய் தீபம் ஏற்றும்போது அதில் இரண்டே இரண்டு கிராம்பை மட்டும் போட்டு ஏற்றுங்கள் . உங்களுக்கு நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும், மனதில் மகிழ்ச்சி பொங்கும் பணம் வரவானது அந்த வருடம் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும்.

Image result for சிவன்  வழிபாடு

அதே போல இந்த தீபாவளி அன்று மாலை வேளையில் நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வழிபடுவது மிகவும் நல்லது குடும்பத்தோடு சிவாலயம் சென்று வழிபட்டு வாருங்கள் எதிரிகளால் இருக்கக்கூடிய தொல்லைகள் அனைத்தும் நீங்கி செல்வ வளமானது பெருகும்.

எப்படி வழிபடுவது :

சிவன் கோயிலுக்கு போகும்போது மஞ்சள் கலந்த அரிசி அதாவது அது ”அச்சதை” என்று சொல்லுவோம். அதை நீங்க கோவிலுக்கு கொடுக்கணும் . அந்த அரிசியானது உடைஞ்சி இருக்கக்கூடாது முழுமையாக இருக்க வேண்டும். அதைத்தான் நீங்கள் கோவிலுக்கு கொடுக்கணும்.

Image result for மஞ்சள் , உப்பு

அதேபோல பூஜையறையில் மஞ்சள் மற்றும் உப்பு வைத்து வழிபட்டால் நமக்கு மஹாலக்ஷ்மி அருளானது கண்டிப்பா கிடைக்கும். மஞ்சள சிறு சிறு உருண்டைகளாக வச்சுக்கலாம். உப்பை தட்டில் வைத்து வழிபட்டு விட்டு அந்த உப்பை பூஜை முடிந்த பிறகு எடுத்து  சமையலுக்கு அல்லது உப்பு ஜாடியில் கொட்டி விடலாம்.

வேறு என்ன செய்ய வேண்டும் :

இந்த உப்பை நாம் பயன்படுத்தும் போது பணவரத்து அதிகரிக்கும் , பணமானது பெருகிக்கொண்டே இருக்கும். இந்த தீபாவளி நாளன்று அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றும்போது திருமணத்தடை உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். அதே போல பலருக்கும் பல விதமான தோஷங்கள் இருக்கும். அவர் களுக்கு இருக்கக்கூடிய அனைத்து தோஷங்களும் விலகி நல்ல ஒரு வாழ்வு அமையும்.

Image result for துளசி மாடம்

வீட்டில் துளசி மாடம் வைத்து இருந்தீங்கன்னா  தீபாவளி அன்று நாம் துளசி மதத்திற்கும் விளக்கு ஏற்ற வேண்டும் . ஏனென்றால் மகாலட்சுமி தேவியை வழிபடுவது சிறப்பு. அதனால துளசி மாடத்திற்கு ஒரு நெய் தீபம் ஏற்றுவது மிகவும் முக்கியமானது.

அடுத்து என்ன செய்வது :

சாதாரணமாகவே நாம பூஜையின்போது தீப தூப ஆராதனை காண்பிப்போம். தீபாவளி அன்று கண்டிப்பாக வீடு முழுவதும் நீங்கள் மணி அடித்து நீங்கள் தீப தூப ஆராதனை காட்டும்போது எதிர்மறையான சக்திகள் , ஆற்றல்கள் அனைத்தும் ஓடி விலகிப்போகும். நேர்மறையான ஆற்றல்கள் வீட்டுக்குள்ளாற வரும். மகாலட்சுமி தேவியானவள் வீட்டுக்கு வருவாள். மகாலட்சுமி படத்துக்குக் கீழே நாணயங்களை வைத்து வழிபடுவது சிறப்பானது.

இந்த நாணயங்களை பூஜை முடிந்த பிறகு நீங்கள் சட்டை பாக்கெட்_க்குள்ள எடுத்து வச்சுக்கலாம் , பர்ஸ் இருந்த அதுக்குள்ளே எடுத்து வச்சுக்கலாம். அதே போல கல்லா பெட்டிக்குள்ள வச்சுக்கலாம்.அதே போல மஞ்சள் உருண்டைகளை வைத்து உன் தந்தையும் எடுத்து உங்களுடைய ஒரு உருண்டையையும் எடுத்து கல்லாப் பெட்டிக்குள்ள வச்சுக்கலாம்.

இதனால் என்ன பயன் : 

இப்படி வைக்குறதனால லட்சுமிதேவி எப்பொழுதும் அந்த இடத்தில் வாசம் செய்வாள் என்பதற்காகவே அந்த மஞ்சளை நாம கல்லா பெட்டிக்குள்ள வச்சு இருக்கோம். எந்த இடத்தில லட்சுமிதேவி இருப்பாங்களோ அந்த இடத்தில் கண்டிப்பா பணப்புழக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இது போன்ற ஒரு பூஜைகளை நாம் செய்யும் பொழுது கண்டிப்பாக அந்த வருடம் முழுவதும் நமக்கு ஒரு வரப்பிரசாதமாக  இருக்கும்.

நாம செய்றது எல்லாமே நல்லத்துல முடியும். நமக்கு வரக்கூடிய எல்லாமே நல்லவையாகவே நமக்கு வந்து சேரும். மனநிறைவு இருக்கும் , வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும் இது போன்ற ஒவ்வொரு விஷயங்களையும் நீங்கள் இந்த தீபாவளிக்கு பார்த்து பார்த்து செய்யுங்கள் கண்டிப்பாக இந்த தீபாவளி இருந்து உங்களுக்கு ஒரு ஏற்றமிகு  நாளாக அமையும்.

Categories

Tech |