Categories
தேசிய செய்திகள்

ஜூன் 21ம் தேதியில் மாணவர்கள், பேராசிரியர்கள் வீடுகளில் இருந்தவரே யோகா செய்யுங்க…AICTE..!!

வரும் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தன்று மாணவர், பேராசிரியர்கள் அவரவர் வீடுகளில் இருந்தவாறே யோகா செய்யவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவர்கள், பொதுமக்களுக்கு யோகா செய்வதன் அவசியத்தை பேராசிரியர்கள் விளக்க வேண்டும் என AICTE கேட்டுக்கொண்டுள்ளது.

சா்வதேச யோகா தினம் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமா் மோடியின் பரிந்துரையை ஏற்ற ஐ.நா.-வும் ஜூன் 21ம் தேதியை சர்வதேச உரோக தினமாக அறிவித்தது. இதையடுத்து ஓவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் பள்ளி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் என உலகளவில் விமர்சையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த வரும் வருடம் நாடே கொரோனா பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வீடுகளில் இருந்தவாறே யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டுகோள் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, யோகா தினத்தின் போது நாட்டின் வெவ்வேறு நகரங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமா் மோடி ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்று வருவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |