Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேவையின்றி வெளியே வரும் நபர்கள் மீது… கடும் நடவடிக்கை… காவல்துறையினர் எச்சரிக்கை…!!

நாமக்கல்லில் ஊரடங்கு காரணமாக வெளியே சுற்றி திரியும் நபர்களை கண்காணிக்க 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மே 31 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு மிகவும் வெறுச்சோடிய நிலையில் காணப்படுகிறது.

இதனையடுத்து அத்தியாவசியமின்றி வெளியே வரும் நபர்களை கண்காணிக்க நாமக்கல் மாவட்டம் முழுவதிலு உள்ள எல்லை பகுதியில் 30க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் சுமார் 1,200 காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அத்தியாவசியமின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |