ஸ்மார்ட்போனில் பேட்டன் லாக் மற்றும் பின் நம்பரை மறந்து விட்டால் நாம் என்ன செய்வது என்பதை குறித்து இதில் பார்ப்போம்.
தற்போது நவீன உலகில் செல்போன் இல்லாதவர்கள் இருக்கவே முடியாது. அனைவரும் செல்போனை உபயோகிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் செல்போனில் உள்ள சில விஷயங்களை யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக பட்டர்ன் லாக் மற்றும் பின் நம்பரை வைத்துக்கொள்கின்றனர். சில சமயம் அதனை அடிக்கடி மாற்றவும் செய்கின்றன. ஒரு பின் நம்பரில் இருந்து மற்றொரு பின் நம்பருக்கு மாற்றும்போது அதை முதன் முதலில் நாம் ஞாபகம் வைத்து கொள்வது கடினம், பலர் மறந்து விடுவார்கள்.
பிங்கர் பிரிண்ட் பாஸ்வேர்ட் இன்னும் மக்கள் மத்தியில் பிரபலம் அடையவில்லை. ஸ்மார்ட் போன்களில் தங்கள் தரவை பாதுகாக்க மக்கள் பேட்டன் லாகை பயன்படுத்தி வருகின்றனர். உங்கள் பாஸ்வேர்டை மறந்து விட்டால் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் உங்களுக்காக வேலை செய்யும். ஸ்மார்ட் போனில் கூகுள் கணக்கை லாகின் செய்தால் அதன் உதவியுடன் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் நிர்வகிக்கலாம். திரையில் காட்டப்படும் லாக் பட்டனை கிளிக் செய்யவும்.
புதிய பாஸ்வேர்ட் வழங்குவதற்கான விருப்பத்தை நீங்கள் டைப் செய்தால் ஐந்து நிமிடத்தில் பணி முடிந்து விடும். தவறான படிவத்தை நீங்கள் 5 முறை பயன்படுத்தினால் 30 நிமிடங்களுக்கு நீங்கள் மீண்டும் முயற்சிக்க முடியாது. அப்போது Forgotten pattern என்ற என்பதை கிளிக் செய்து, உங்கள் கூகுள் கணக்கின் விவரங்களை உள்ளிட வேண்டும்.
பேட்டன் லாக் பற்றிய விவரங்களை மெயிலில் அனுப்பவும். சாம்சங் பயனாளர்களுக்கு மை மொபைல் என்ற சேவை உள்ளது. சாம்சங் கணக்கு இருந்தால் நீங்கள் பிரவுசரின் உள்ளே நுழைய வேண்டும். அதன்பிறகு லாக் ஸ்கிரீன் என விருப்பம் இடது பக்கத்தில் தோன்றும். நீங்கள் புதிய பின்னை உள்ளிட்டு லாக் என்பதை கிளிக் செய்து, இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து உங்கள் பாஸ்வேர்டை நீங்கள் போட்டால் போன் ஓபன் ஆகி விடும்.