மெக்சிகோவில் கடற்கரையில் வினோத உயிரினம் ஓன்று இறந்து கரை ஒதுங்கியிருப்பதை பார்த்து அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மெக்சிகோ நாட்டில் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை நகரம் புவேர்ட்டோ வல்லார்டா. இந்த நகரத்தின் எழில் மற்றும் இயற்கை அழகை ரசிக்கவும், கடலில் அலைச்சறுக்கு சாகசங்கள் செய்யவும் பல்வேறு நாட்டு சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்வார்கள். இந்நிலையில், இப்பகுதியில் இருக்கும் டெஸ்டிலாடெரஸ் என்ற கடற்கரையில் கண்கள் இல்லாத பார்ப்பதற்கே விசித்திரமான வினோத உயிரினம் ஒன்று கரை ஒதுங்கி பரபரப்பை ஏற்படுத்தியது.
அங்கிருந்த பலரும் இப்படி ஒரு உயிரினத்தை பார்த்ததே இல்லையே என்று கூறினர். சம்பவ நாளன்று கடற்கரையில் மக்கள் ஜாலியாக பொழுதை கழித்து கொண்டிருந்தனர். அப்போது தான் திடீரென இறந்த நிலையில் ஒரு உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு டால்பின் போன்று தோற்றத்துடன் இருந்துள்ளது.
சிலர் டால்பின்கள் தான் இறந்து கரையொதுங்கியிருக்கும் என நினைத்துள்ளனர். ஆனால் அங்கிருந்த மக்கள் சிலர் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது பார்த்து பார்த்து மிரண்டு விட்டனர். ஆம், கண்களே இல்லாமல் கொடிய கூர்மையான பற்களுடனும் , தலைப்பிரட்டை போன்ற வாலுடனும் இருந்ததை பார்த்து ‘என்னடா இது’ என்று அதிர்ச்சி அடைந்தனர்.
இதை பார்த்த அங்கிருந்த உள்ளுர் மக்கள், பசிபிக் கடலின் மிக ஆழமான கடல்பகுதியில் (சூரிய ஒளி புகமுடியாத ஆழம்) இருந்து அந்த வினோத உயிரினம் வந்திருக்கலாம். அத்தையக ஆழத்தில், முழுவதும் இருட்டாகவே இருக்கும் பட்சத்தில் கண்கள் தேவைப்படாமல் இருக்கலாம் என தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.