கள்ளக் காதலியின் 20 வயது மகளின் மீது ஆசைப்பட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் 20 வயது மற்றும் 18 வயது உடைய இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இதனால் தனது மகள்களை அழைத்துக் கொண்டு அவருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் அந்த நபருக்கு கள்ளக்காதலியின் 20 வயது மகள் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.
சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்த அந்த நபர் மகளின் தாய் வெளியில் சென்ற நேரத்தில் மிளகாய்பொடியை தண்ணீரில் கலந்து எடுத்துச்சென்று அந்த பெண்ணின் கண்களில் ஊற்றிவிட்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அடுத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வெளியில் சென்ற தாய் வந்தவுடன் மகள் நடந்த சம்பவம் அனைத்தையும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பெயரில் காவல்துறையினர் தலைமறைவாக இருந்த அந்த நபரை கண்டுபிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.