ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி இன்று 123 ஜோடிகளுக்கு திருமணத்தை முதலவர் நடத்தி வைக்க இருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24-ஆம் தேதி வருவதால் கோடடபட இருக்கிறது. இதையடுத்து ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கோவை சிறுவாணி சாலையில் உள்ள செட்டிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பந்தலில் 123 திருமண ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று திருமணம் நடைபெற இருக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்க உள்ளனர்.
திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கி இருக்கின்றனர். திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களின் உறவினர் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை விருந்தும் அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து கோவையே திருமணகோலம் பூண்டுள்ளது.