Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…. கிராக்கியான பூக்கள் விலை…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

பூ மார்க்கெட்டில் விசேஷ நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பதும், சாதாரண நாட்களில் குறைவதும் இப்படி குறைவதும், அதிகரிப்பதும் வழக்கம். இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. இதையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

நேற்று 1000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ, இன்று கிலோ ஒன்றுக்கு 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.600 க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ரூபாய் 1, 250 க்கும், ரூபாய் 60 க்கு விற்பனையான கேந்தி பூ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Categories

Tech |