தை அமாவாசையை முன்னிட்டு மதுரை- ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பெரும்பாலும் வழக்கமாக பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு மதுரை- ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் மதுரையில் இருந்து இன்று இரவு 11.45- க்கு புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்திலிருந்து நாளை காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு மதுரை வந்தடையும். மேலும் தாதர் – புதுச்சேரி, தாதர்-திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.