Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உலக கடல் தினத்தை முன்னிட்டு… தீவுகளை சுத்தம் செய்த… மண்டபம் வனத்துறையினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் வனத்துறையினர் நேற்று தீவுகளில் இருக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மன்னார் வளைகுடா பகுதிகளில் சுமார் 21 தீவுகள் உள்ளது. அதில் 7 தீவுகள் மண்டபம் வனச்சரக அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று உலக கடல் தினம் என்பதால் மண்டபம் வனத்துறையினர் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் குருசடை தீவு, முயல் தீவு உள்ளிட்ட தீவுகளில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் இந்த பணிக்கு தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து வனவர்கள் தேவகுமார், மகேந்திரன், வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் இணைந்து தீவுகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் போன்றவற்றை அகற்றியுள்ளனர்.

Categories

Tech |