புதுக்கோட்டையில் 13 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஜூஸ் கடை ஒன்று உள்ளது. அதில் ஒருவர் மதியம் ஜூஸ் சாப்பிட்டு இரண்டு நூறு ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அந்த ரூபாய் நோட்டுகள் சந்தேகப்படும்படியாக இருந்தன. இதையடுத்து அந்த நோட்டுகளை பற்றி கேட்கும்போது அவர் முரண்பாடாக பதில் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த ஜூஸ் கடை உரிமையாளர் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் நகர காவல் நிலையம் காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டபோதும் அவர் முரண்பாடாக பதிலளித்துள்ளார். இதையடுத்து அவரிடம் சோதனை செய்த போது கைகளில் 2000 ரூ, 100, 50 என 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை அவர் வைத்திருந்தார். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை நகர காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வரும் நிலையில்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் வனத்துறையின் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. என் காதலிதான் எனக்கு இந்தக் அந்த ரூபாய் நோட்டுகளை செலவுக்கு கொடுத்ததாக அவர் தெரிவித்தார். இவர் கூறியது உண்மையா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.